அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் District Collector Ariyalur என்ற முகநூல் பக்கம் (Face Book) மற்றும் districtcollectorariyalur என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முகம் தெரியாத நபர்களால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெயருடன் N Mirunalini Ias என்ற போலியான முகநூல் பக்கம் (Face Book) உருவாக்கப்பட்டு அதன் மூலம் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை தொடர்புகொண்டு தொலைபேசி எண்களை பெற்று +91 60012 52658 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால் (Whatsapp Call) மூலமாகவும், வாட்ஸ்அப் மெசேஜ் (Whatsapp Message) மூலமாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி பெயரில் தொடர்பு கொள்வதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளது. மேற்கண்ட முகநூல் பக்கம் (N Mirunalini Ias) மற்றும் தொலைபேசி எண் (+91 60012 52658) அல்லது வேறு எண்களிலிருந்து பொய்யான அழைப்புகள் வந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம்.
மேலும் மேற்கண்ட முகநூல் பக்கம் மற்றும் தொலைபேசி எண்களிலிருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தோ ஏதேனும் இதுபோன்ற பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.
