Skip to content

கோவை கொடிசியாவில் இன்று ஜவுளி மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை விமான நிலையத்தில் திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கழக மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், மாநில தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் திரளாக வந்து துணை முதலமைச்சரை வரவேற்றனர்.

error: Content is protected !!