வார கடைசியில் “ஏதாவது வேற மாதிரி படம் பார்க்கலாமே”ன்னு யோசிக்கிறீங்களா? அப்படின்னா, சோனி லைவில் இருக்குற துல்கர் சல்மான் நடித்த ‘சல்யூட்’ ஒரு நல்ல தேர்வு தான். இது வழக்கமான போலீஸ் படம் மாதிரி சண்டை, ஹீரோ எலிவேஷன் எல்லாம் இல்லாம, ஒரு போலீஸ் அதிகாரி மனசுக்குள்ள என்ன நடக்குது என்பதைக் காட்டுற படம்.
சல்யூட் கதை
அரவிந்த் கருணாகரன் (துல்கர் சல்மான்) நேர்மையான போலீஸ் ஆபீசர். அண்ணனை பார்த்து தான் போலீஸ் ஆகணும்னு கனவு காண்றவன். ஆனால் ஒரு கொலை வழக்கில் அரசியல் அழுத்தம் காரணமா, ஒரு அப்பாவி ஆட்டோ டிரைவரை குற்றவாளியாக்கிய டீம்ல அவனும் ஒரு பாகமா இருக்கிறான்.
வழக்கு முடிஞ்சு விருது கிடைத்த பிறகும், “நாம சரியா தான் பண்ணோமா?”ன்னு அவன் மனசு கேள்வி கேட்க ஆரம்பிக்குது. அந்த குற்ற உணர்ச்சியோட தான், உண்மையை நீதிமன்றத்துக்கு சொல்ல முடிவு எடுக்குறான். அதுக்கப்புறம் அவன் சந்திக்குற பிரச்சனைகள் தான் படத்தோட முக்கியமான கதை.
துல்கர் சல்மான் நடிப்பு
இந்த படத்துல துல்கர் சல்மானுக்கு பெரிய ஹீரோ பில்ட் அப் காட்சிகள் கிடையாது. சண்டையும் இல்லை. ஆனா அமைதியான நடிப்பாலேயே அவர் அந்த கேரக்டருக்குள்ள நம்மை இழுத்துக்கிட்டு போறார். சில சீன்களில் அவர் எதுவும் பேசாம இருந்தாலே, அவருக்குள்ள எவ்வளவு குழப்பம் இருக்குன்னு நமக்கு புரிஞ்சுடுது.
படம் முழுக்க ஒரு அழுத்தமான சூழல் தான். இரவு காட்சிகள், போலீஸ் ஸ்டேஷன் சீன்கள் எல்லாம் நம்மையும் அந்த விசாரணை உலகத்துக்குள்ள கொண்டு போகுற மாதிரி இருக்கும். வேகம் அதிகமா இல்ல, மெதுவா தான் போகும். ஆனா கதைக்குள்ள நுழைந்துட்டா, அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணும்.
க்ரைம் படம் டிப்ரண்டா, கொஞ்சம் சீரியஸா இருக்குற க்ரைம் படங்கள் பிடிப்பவர்களுக்கு ‘சல்யூட்’ நிச்சயம் பிடிக்கும். “போலீஸ் படம் என்றாலே அடிதடி தான் வேணும்”ன்னு நினைக்குறவர்களுக்கு இது மெதுவா தோணலாம். ஆனா அமைதியா ஒரு நல்ல கதை பார்க்க விரும்புறவர்களுக்கு இது சரியான படம்.

