கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குளித்தலை – மணப்பாறை சாலை வை.புதூர் பகுதியில், இரும்பூதிப்பட்டி பகுதியில் இருந்து குளித்தலை நோக்கி வந்த மினி பேருந்தும், குளித்தலையில் இருந்து பஞ்சப்பட்டி வழியாக கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண், 18 பெண்கள் 10 ஆண்கள் என 28 பேர் காயமடைந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இரும்பூதிப்பட்டி இருந்து மினி பேருந்து அய்யர்மலை வேங்கம்பட்டி, தாளியாம்பட்டி வழியாக குளித்தலை வந்து கொண்டிருந்த நிலையில், இரண்டு நாட்களாக தைப்பூச திருவிழா நடந்து வருவதால் அனுமதி இல்லா வழித்தடத்தில் பயனிகளை ஏற்றுவதற்காக இரும்பூதிப்பட்டியிலிருந்து

அய்யர்மலை வாய்ப்புதூர் வழியாக குளித்தலை நோக்கி அதி வேகமாக பேருந்து வந்துள்ளது. வை.புதூர் பகுதியில் இருந்த வேகத்தடை தெரியாமல் வேகத்தடையில் ஏறி எதிரே வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் பாய்ந்து மோதியது. விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

