கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் மனைவின் நோய் குணமாகாததால் மன வருத்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை சேற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கமலேஷ் மின்சார வாரியத்தில் ஜூனியர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு செய்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கமலேஷ். 48 வயதான இவர் தமிழ்நாடு மின்சார வாரியம் நாயக்கன்பாளையம் துனை மின் நிலையத்தில் ஜீனியர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் எக்ஷிதா ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அவர்களது வீட்டில் கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அருகில் இருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சமபவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் கமலேஷின் மனைவி இலக்கியாவிற்கு கடந்த ஓராண்டாக மார்பக புற்றுநோய் இருந்து உள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் சரியாகத மன வருத்தத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்கொலைக்கு முன்னர் கமலேஷ் வீடியோ பதிவை ஒன்றே வெளியிட்டுள்ளார் அதில் தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள மார்பக புற்றுநோயை சரி செய்ய முடியாததால் நோயினால் அவர் அவதிப்பட்டு வ்ருவதாகவும், இதன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாகவும், உடல்களை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் அடக்கம் செய்யுமாறும், அதற்காக 50 ஆயிரம் அங்கு செலுத்தியுள்ளதாகவும், தனது பிக்சட் டெபாசிட் பணம் 10 லட்சத்தை சிஎஸ்ஐ தேவாலயத்திற்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தான் பணியில் உள்ள போது இறந்துள்ளதால் அதில் வரும் பணத்தை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும். தங்களது உடல்களை தமிழக அரசு வாரிசாக இருந்து அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் இணைந்து இறுதிச் சடங்கு செய்திட வேண்டும் என வலியிறுத்தி உள்ளார்.

