Skip to content

பாலியல் தொல்லை கொடுத்த நண்பன் கொலை: காதலன் உட்பட 3 பேர் கைது

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷிற்கு, ரகு சவுகான் (27) என்ற நண்பர் இருந்துள்ளார். ரகு சவுகானின் காதலியான கீதா மாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், மகேஷ் அவருக்கு அடிக்கடி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரகு சவுகான், தனது காதலி மற்றும் கூட்டாளி ஷியார் மங்ரோலியாவுடன் இணைந்து மகேஷைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு பால்கர் மாவட்டம் நைகாவில் உள்ள ஒரு உணவகத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மகேஷை அவர்கள் வரவழைத்துள்ளனர்.

உணவகத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரகு சவுகானும் அவரது கூட்டாளியும் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேஷை சரமாரியாகக் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய மூவரும் குஜராத் மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ரகு சவுகான், கீதா மாலி மற்றும் ஷியார் மங்ரோலியா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!