Skip to content

பிரான்ஸில் விபரீதம்: ஆசனவாயில் பீரங்கி குண்டுடன் வந்த இளைஞர் – மருத்துவமனை காலி

பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கடந்த 31-ம் தேதி இரவு 24 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவர் கூறிய விஷயம் ஒட்டுமொத்த மருத்துவமனையையுமே பீதியில் ஆழ்த்தியது. தனது ஆசனவாயில் ஒரு பொருள் சிக்கிக்கொண்டதாகவும், அதை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

முதலில் ஏதோ சாதாரண பொருள் என்று நினைத்த மருத்துவர்கள், அவரைப் பரிசோதித்தபோது தூக்கி வாரிப்போட்டது. அவரது ஆசனவாய்க்குள் முதல் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட 8 அங்குல நீளம் கொண்ட பீரங்கி குண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சத்தில், உடனடியாகக் காவல்துறையினருக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த இளைஞரின் அடிவயிற்றில் ஆபரேஷன் செய்து, ஆசனவாய்க்குள் சிக்கியிருந்த பீரங்கி குண்டை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

அந்தப் பழங்கால குண்டு இளைஞரின் உடலுக்குள் எப்படிச் சென்றது? அவர் எதற்காக அதனை ஆசனவாய்க்குள் நுழைத்தார்? என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.பிரான்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் வரும் நகைச்சுவைக் காட்சியைப் போல நிஜத்தில் நடந்த இந்த விபரீத சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

error: Content is protected !!