கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்

வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை மேயர்

சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மடிக்கணினி மற்றும் தமிழக அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களின் சிறப்பு குறித்து எடுத்துக் கூறினார்.
அதனை தொடர்ந்து கரூர் சட்டமன்ற உறுப்பினர் மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்பு உரையாற்றினார்.

