Skip to content

இன்ஸ்டாகிராம் பழக்கம்: 13 வயது சிறுமியை மணந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியை திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தாமோதரனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!