Skip to content

கரூரில் ரூ.6.90 கோடியில் பிரம்மாண்ட புதிய நூலகம்- VSB ஆய்வு

கரூரில், 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாநகராட்சிக்கு
ட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 6 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய

நூலகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டியளிக்கையில்; கரூர் மையப் பகுதியில், 17,100 சதுர அடியில் மிகப் பிரமாண்டமாக நூலகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

15 தினங்களில் பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் கையால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு சுமார் 500 மாணவர்கள் அமர்ந்து போட்டி தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!