Skip to content

வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் – 2 பேர் காயம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி விமானத்தை உடனடியாக தரையிறக்க முயற்சித்தார்.

ஆனால், விமானம் விஜயவாடா அருகே உள்ள கிராமத்தின் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!