திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கமான பரபரப்புடன் இன்று இயங்கியது.
வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்தனர். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணபதி தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.
காலையில் ஒன்பது முப்பது மணிக்கு புதிய நீதிமன்ற கட்டிடம் முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கோர்ட்டுக்குள் சென்றார் 11 மணி அளவில் அவரது ஜூனியர் பதறி அடித்துக் கொண்டு அவரை பார்க்க ஓடோடி வந்தார். அப்போது தங்களது பைக் மீது மோட்டார் சைக்கிளில் பாம்பு உள்ளது என ஒரு துண்டு காகிதத்தில் எழுதி கல் வைத்துவிட்டு சென்றுள்ளனர் என கூறினார் உடனே பதறி அடித்துக் கொண்டு அவர் வெளியே வந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார் தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கே விரைந்து வந்தனர் பின்னர் பைக்கை பார்த்தபோது பாம்பை காணவில்லை.
பின்னர் வழக்கறிஞர்களின் வேண்டுகோளை ஏற்று மோட்டார் சைக்கிளை ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தனர். அப்போது இண்டிகேட்டருக்கு பின்னால் ஒரு பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

