Skip to content

மெலட்டூர் அருகே 20 நாட்களாக கீழே கிடக்கும் மின் கம்பிகள்-

மெலட்டூர் அருகே 20-தினங்களுக்கு மேலாக வயல்களில் கீழே விழுந்து அப்புறப்படுத்தாத நிலையில் கிடக்கும் மும்முனை மின்சார போஸ்டர்கள் மற்றும் கம்பிகள்..

கோடை நெல் சாகுபடி செய்வதற்கு தாமதம். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகள் சிக்கி பலியாகும் அபாயம்..

வயலில் விழுந்து கிடக்கும் மின்சார போஸ்டர்கள் மற்றும் மின் கம்பிகளை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை ஊன்றி, தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே கோணியக்குறிச்சி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்..

சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்த மறுதினம், காற்றின் வேகம் சிறிது அதிகமாக இருந்த காரணத்தினால் வயல்களில் ஊண்டப்பட்டுள்ள மும்முனை மின்சாரம் செல்லும் இரண்டு கம்பம் வயல்களில் விழுந்தும், ஒரு கம்பம் சாய்ந்து நிலையிலும் காணப்படுகிறது..

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து அதிகாரிகள் சுமார் 20-தினங்களுக்கு மேலாகியும் வயல்களில் கீழே விழுந்து கிடக்கும் மும்முனை போஸ்டர் மற்றும் மின்சார கம்பிகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டதாகவும்..

அடுத்து கோடை சாகுபடி செய்வதற்கு தாமதம் ஏற்படுவதாகும், மேலும் வயல்களில் கிடக்கும் மின் ஒயர்கள் வயலில் அப்புறப்படுத்தாமல் கிடப்பதால், மேச்சலுக்கு வரும் ஆடு மாடுகள் கம்பியில் சிக்கி உயிரிழக்கக் கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கும் விவசாயிகள்..

வயலில் விழுந்து கிடக்கும் மும்முனை மின்சார போஸ்டர் மற்றும் கம்பிகளை உடனடியாக அப்புறப்படுத்தி, புதிதாக மின் கம்பங்களை ஊன்றி விவசாயத்திற்கு தங்கு தடையின்றி மீண்டும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

error: Content is protected !!