Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

திருவண்ணாமலை, வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டை இடித்து சீரமைப்பதற்கான பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது முனியனின் உறவினர் மகன்கள் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் வீட்டின் அருகே இருந்துள்ளனர்.

அப்போது வீடு சீரமைப்பு பணியின்போது எதிர்பாராதவிதமாக இடிபாடுகளில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுடன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இறந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!