Skip to content

மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதித்ததால்- நீட் திணிப்பு

மோடியை தன்மீது சவாரி செய்ய அதிமுக அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்திற்குள் திணிக்கப்பட்டது: ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கதவை திறந்து விட்டு, அதிகாரத்தை அடகு வைத்ததை திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் தாக்கு.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் மொழிப்போர் போராட்டத்தின் போது தனது இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமியின் நினைவாக மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்ட நினைவு

அரங்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் உறவினர்கள் நினைவரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சின்னசாமியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், அதிமுக வெற்றி பெற்றால் மோடி தான் ஆட்சி புரிவார் என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மோடி ஆட்சி செய்தால் என்ன? என சொல்லியது குறித்த கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்…

ஏற்கனவே அப்படி அவர்கள் இடம் கொடுத்த காரணத்தினால் தான், தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கின்ற நீட் தேர்வு இங்கே திணிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சி செய்ய, அவர்கள் மீது சவாரி செய்ய அனுமதித்த காரணத்தினால் தான் உதய் மின் திட்டம் வந்து இன்றைக்கு மின்சாரக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிமுக கொண்டு வந்து சேர்த்தது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒன்றிய அரசிற்குத் திறந்து விட்டுவிட்டார்கள் தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு அதிகாரத்தை அவர்களிடத்திலே அடகு வைத்து விட்டார்கள். எனவே அது போன்று நடக்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதை வந்து இன்றைக்கு திண்டுக்கல் சீனிவாசன் அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்று அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

error: Content is protected !!