நாடுகளுக்கிடையேயான போர் பதட்டங்கள் போன்ற உலகளவிலான பல்வேறு காரணங்களால் தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உயர்வை கண்டது. குறிப்பாக, ஆண்டின் இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்ததை போன்றே ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டியது.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தொடக்கத்திலும் தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்துக்கொண்டே போனது. இதனிடையே, மத்திய பட்ஜெட் அறிவிப்பு மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித மாற்றத்துக்கு பிறகு, படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்தது. மேலும், ரஷ்யா – அமெரிக்க இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்திருக்கும் நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 ஆயிரம் வரை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.
ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை (பிப். 14) கிராமுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 14,560க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 120 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, பிப். 14 அன்று சவரனுக்கு ரூ. 1,280 அதிகரித்து ரூ. 1,16,480க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்றுரூ. 960 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,15,520க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை இன்று(பிப்.17) சவரனுக்கு ₹960 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹120 குறைந்து ₹14,320-க்கும், சவரன் ₹1,14,560-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் தங்கம் விலை இந்திய சந்தையில் தொடர்ந்து 2-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

