Skip to content

டாஸ்மாக் கடையை மூட கோரி- ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இரண்டு கடைகளும் வட வீக்கம் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த இரண்டு வருட காலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனாலும் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை.

அதுமட்டுமின்றி பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடை அருகில் அரசு விதிமுறைகளை மீறி விடிய விடிய கள்ளத்தனமாக சிலர் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாகவும், தட்டிக் கேட்கும் பொது மக்களை குண்டர்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அதிருப்தி அடைந்த கிராம பொதுமக்கள் அதே கல்லாத்தூர் கடைவீதியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள்

இளைஞர்கள் என போராட்டம் நடத்தினர்.  இதனால் ஜெயங்கொண்டம் – விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.நீண்ட வரிசையில் அரசு பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கண்ணீர் மல்க இரண்டு டாஸ்மாக் கடைகளை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இங்கு வந்து உறுதி அளித்தால் மட்டுமே கலந்து செல்வோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்திலும் மனித நேயம் ஆம்புலன்ஸ்க்கு வழிபட்ட பொதுமக்கள்
பொதுமக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நோயாளியை அழைத்து வந்து

கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் உடனடியாக எழுந்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு மட்டும் வழியை விட்டு பின்னர் போராட்டத்தில் தொடர்ந்தனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் போராட்டத்திலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பதாக தெரிவித்தனர்.  பெண்களோடு சேர்ந்து டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த செல்வதாக கூறி பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையிலான பெண்கள் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!