Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்


மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பிரிவு அலுவலகங்களில் ஒலி முழக்க போராட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்ஜினியர் சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், சி.ஐ.டி.யு.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, எம்ளாய்ஸ் பெடரேஷன் சங்கங்கள் கலந்து கொண்டன. ஆர்பாட்டத்தில். சி.ஐ.டி.யு. திருச்சி மாவட்ட செயலாளர் எஸ். ரெங்கராஜன், பாலசுப்பிரமணி, அழகேசன், சிவ செல்வம், பழனியாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நடராஜன் நன்றி கூறினார்.
இதே போன்று ஆர்ப்பட்டம் கே.கே.நகர் வெள்ளனூர் , மன்னார் புரம், துறையூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி கைலாசபுரம். ஆகிய இடங்களிலும் நடந்தது.இந்தப் போராட்டத்தில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து மின்சார ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!