இந்தியா கூட்டணியில் ஏதோ பிரச்னை இருப்பதால்தான், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என அவர்கள் கூறிக்கொண்டு இருப்பதாக சீமான் கூறியுள்ளார். அந்தக் கூட்டணியில் வலுவான தலைவராக இருப்பது ஸ்டாலின் தான் என கூறிய அவர், CM வெளியேறிவிட்டால் இண்டியா கூட்டணி என்பது வெறும் எழுத்தில் தான் இருக்கும் என விமர்சித்துள்ளார். அதனால்தான் மணிசங்கர் ஐயர் CM-ஐ கூட்டணிக்கு தலைமை தாங்க அழைக்கிறார் எனவும் பேசியுள்ளார்.

