தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வழங்கினர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் புதிதாக தேமுதிக இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. விருப்பமனு விநியோகத்தை திமுக செய்தி தொடர்பு அணி தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் வழங்கி தொடங்கி வைத்தனர்.
234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை பகிர்ந்து அளிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 170 தொகுதிகளில் திமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தற்போது விருப்ப மனுக்களை பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு அளித்தார்.
கிரிராஜன் எம்.பி.யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்ப மனுக்களை வழங்கினார். திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் விருகம்பாக்கம் தொகுதியில் தான் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை வழங்கினார். இதே போன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திமுக. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். ஏராளமானோர் பூர்த்தி செய்த விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து விருப்ப மனு விநியோகம் வருகிற 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் என்ன?
திமுகவின் வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிப்பவரின் பெயர் விவரம், தற்போது வசிக்கும் தொகுதி, தொழில், கல்வி, கட்சி உறுப்பினர் எண்? எந்த ஆண்டு முதல், கட்சியில் வகிக்கும் பொறுப்பு என்ன?. பொதுப்பணியில் வகித்த, வகிக்கும் பொறுப்பு? கட்சி நடத்திய போராட்டங்களில் சிறை சென்றதுண்டா? அதன் விவரம்?. தங்கள் மீது நிலுவையில் உள்ள, தீர்ப்பு வழங்கப்பப்பட்ட வழக்குகளின் விவரம்?.
வேறு அரசியல் கட்சிகளில் இருந்ததுண்டாயின் விவரம்?. இதற்கு முன்னர் போட்டியிட்ட தேர்தல்களும்- முடிவு விவரம், வெற்றி வாய்ப்புக்கான காரணம்? என 15 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. மேலும் விருப்பமனு கொடுப்பவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகள் பற்றிய விவரங்களும் தனியாக கேட்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் தவறாக இருப்பின் விருப்ப மனு நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

