திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அங்கு வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். மேலும் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு அரசு பஸ் நின்று கொண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தது. அப்பொழுது அந்த பஸ்சின் பின்புறம் நின்ற தனியார் பஸ்டிரைவர் திடீரென்று இந்த அரசு பஸ்சை முந்திக்கொண்டு முன்னே வந்து நின்றது.இதனால் தனியார் பஸ்,அரசு பஸ் டிரைவர் இடையே மோதல் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் அரசு பஸ் டிரைவர் திடீரென்று பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி வந்து பஸ்சை எடுக்காமல்
தனியார் பஸ் டிரைவர்யிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.இதனால்நீண்ட நேரமாக பயணிகள் செல்ல முடியாமல் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி எந்த பஸ்சுக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசு பஸ் தனியார் பஸ் டிரைவர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
