Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வெள்ள விநாயகர் கோவிலில் கொடியேற்றம்

1500 ஆண்டுகள் பழமையானதும்,
அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு வாணி ,கமலாம்பிகா எனும் இரு மனைவியருடன் விநாயகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சுமார் 1500 ஆண்டுகள் பழமையானதும் , அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரால்

தேவார பாடல் பதிகம் பெற்ற தலமாகவும் விளங்குவது சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயம் .

இவ் ஆலயத்தில் விநாயகர் தனி சன்னதி கொண்டுள்ளார் .
விநாயகர் சன்னதி அமைந்துள்ள பகுதி முழுவதும் கருங்கற்களில் கற்பனை செய்ய முடியாத அளவில் சிற்ப வேலைகள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது.

தொன்மையான இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு வாணி கமலாம்பிகை எனும் இரு மனைவியர்களுடன் விநாயகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கொடியேற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

தேவர்கள் பாற் கடலில் அமுதம் வேண்டி கடையும் போது வந்த கடல் நுரைகளால் திருவலஞ்சுழியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வெள்ளை விநாயகர். இவருக்கு இங்கு அபிஷேகங்கள் கிடையாது சங்கடகர சதுர்த்தி நாள் பஞ்சகற்பூரம் மட்டும் சாற்றப்படும். வேறு எங்குமே நடைபெறாத திருக்கல்யாண வைபவம் இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஏழாம் நாள் திருவிழாவில் வாணி கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது சிறப்பு.

இன்று முதல் தினம் தோறும் காலை மாலை இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவேத விநாயகர் வீதி உலா நடக்கிறது. விழாவில் ஏழாம் நாளான 12 ஆம் தேதி சனிக்கிழமை மாலை வாணி கமலம்பிகா சமேத சுவேத விநாயகர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 14ஆம் தேதி காலை 9மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!