அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது சிரமமாக உள்ளது; அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ள நிலையில், வழக்கில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
