அஸ்ஸாம் மாநிலம் குவகாத்தியில் ரியா தலுக்தர் என்ற பெண்ணை அவரது கணவர் ராமானுஜன் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பெண்ணின் விரல்களைத் துண்டித்து, தலையைப் பாலித்தீன் பையில் சுற்றிப் பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், வீட்டில் துர்நாற்றம் வீசியதால் இக்கொலை வெளிச்சத்துக்கு வந்தது. கொலையைச் செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
