Skip to content

ஈரானில் இருந்து வெறியேறுங்கள்… இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

டெஹ்ரான்: ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர கால எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை காலக்கெடு விதித்துள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்திய துாதரகம் அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்திய துாதரகம் தெரிவித்துள்ளதாவது: ஈரானில் இருக்கும் இந்திய மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வணிக ரீதியான விமானங்கள் அல்லது கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள் உள்ளிட்ட அனைத்துப் பயண ஆவணங்களையும் எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.போராட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உள்ளூர் செய்திகளைத் தொடர்ந்து கவனிப்பதோடு, தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அல்லது அவசர காலங்களில் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

error: Content is protected !!