Skip to content

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மாற்றி அமைத்து உரிய கட்டணம் நிர்ணயித்து அமல்படுத்த வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், டாக்ஸி ஓட்டுனர்கள் இயங்கினால் அதை உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அதை செய்ய நேரிடும், திருச்சி மாவட்டத்தில் 15000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அது தவிர தனியார் நிறுவன மின் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும், மீ ட்டர் கட்டணத்தை திருத்தி இயக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் மற்றும் மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை விளக்கங்களை எழுப்பினர்.

error: Content is protected !!