Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி..

சேலம் அருகே அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நல்லசிவம் என்பவர் உயிரிழந்தார்.

சேலம் அருகே அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜோதி தியேட்டர் கிழக்கு நகர் பகுதியில், ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் நல்லசிவம் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பகுதியில் இருந்த 3 ஓட்டு வீடுகளில் தீப்பிடித்து, கரும்புகை வானில் எழும்பியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைக்க தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். தீ விபத்துக்குள்ளான 3 ஓட்டு வீடுகளுக்குள் சென்று பார்த்தபோது, அவற்றின் மேற்கூரைகள் முற்றிலும் சேதமடைந்தும், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியும் இருந்தன.

இந்த விபத்து நடந்த சமயத்தில், அந்த 3 வீடுகளில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். ஆனால், நல்லசிவம் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக நடக்க முடியாமல் அதே வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், சிலிண்டர் வெடித்ததில் அவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!