Skip to content

நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், பொறுப்பாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த எனது கருத்தை கூறினேன். 22 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவன் நான். 15 ஆண்டுகாலம் கட்சி நடத்தியுள்ளேன. வாக்குறுதிகள் தொடர்பாக ஏற்கனவே தமிழிசையை சந்தித்து கூறியுள்ளேன். எனவே எனது கருத்துகளை மாநில தலைவரிடம் கூறினேன்.அடுத்த மாதம் 1 ம் தேதி பிரதமர் தமிழகம் வருகை தருகிறார்.. நான் அப்போது வேறு பணி நிமித்தமாக வெளியில் செல்வதால் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது..அடுத்த மாதம் 6 ம் தேதிக்கு பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்” என்றார்.

error: Content is protected !!