Skip to content

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (56). இவருடன் அவரது மாமியார் இன்குருதையம்மாள் (86) வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தனர் .அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து
உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இன்குருதையம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 9 தங்க செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட
இன்குருதையம்மாள் சத்தம் போட்டுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் உடனடியாக எழுந்து வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. திருடு போன தங்க செயின் மதிப்பு 9 பவுன் என்பதும் தெரிய வந்ததது. இது குறித்து புகாரின் பேரில் எடைமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காணிக்கை எண்ணும் பணியின் போது வெளிநாட்டு பணம் திருடிய பாதுகாவலர் மீது வழக்கு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்தில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது .அப்போது கோயில் பாதுகாவலர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சில வெளிநாட்டு பணத்தாள்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோயில் பணி முடித்து வந்த அலுவலர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திருவரங்கம் அம்மா மண்டபம் சாலை பகுதியைச் சேர்ந்த பாதுகாவலர் சங்கர் (40) என்பவர் கோவில் காணிக்கையாக பெறப்பட்ட 27 வெளிநாட்டு பணத்தாள்களை திருடியது தெரிய வந்தது. இது குறித்து கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தாள்கள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 12,500 என தெரிய வந்துள்ளது.

மயங்கி விழுந்து முதியவர் சாவு

திருச்சி உறையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (61 ) .இவர் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பட்டா விநியோக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார் அப்போது திடீரென பஞ்சலிங்கம் மயங்கி சரிந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை வீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவரை பரிசோதித்து டாக்டர்கள் பஞ்சலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூட்டு வலியால் அவதி- வீட்டில் தூக்கு போட்டு மூதாட்டி தற்கொலை…

திருச்சி கருமண்டபம் விநாயகர் நகரை சேர்ந்தவர் லட்சுமி ( 84) இவர் தன் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இவர் முட்டி வலியால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார் இந்த நிலையில் இவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து செஸன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!