Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு சுவாமி நேற்று வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய மண்டபத்தில் இருந்து மேள

தாளங்கள் முழங்க சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம் நடைபெற்ற பிறகு வெள்ளி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தது.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சுவாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் சுவாமியை மனதார மனமுருகி வழிபட்டு சென்றனர்.

error: Content is protected !!