இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன.
இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா கார்கி செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, புதிய அரசை தேர்வு செய்ய நாடாளுமன்ற தேர்தல் 5ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேபாளத்துடனான எல்லையை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேபாள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 2ம் தேதி நள்ளிரவு முதல் 5ம் தேதி நள்ளிரவு வரை அந்நாட்டுடனான எல்லையை மூடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

