தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் திமுக மாநில மாநாட்டை திருச்சியில் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது
திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் வரும் மார்ச் 9-ஆம்

தேதி நடைபெறவுள்ள தி.மு.க-வின் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது .
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் இந்த மாநாடு, தி.மு.க-வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் 2026 தேர்தல் திமுகவின் வாக்குறுதிகள் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டுத்திடலில் பிரம்மாண்ட மேடை பாதுகாப்பு வசதிகள் மேலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களுக்கான உணவுக்கூடங்கள், குடிநீர் வசதிகளை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மாநாடு மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமரும் பகுதி மட்டும் 400 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இவைத்தவிர, வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கா் இடம் தயாா்படுத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் லிட்டா்

கொள்ளளவுக்கான குடிநீா்த் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளன. சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பா் என்பதால் 5 ஆயிரம் பாா்வையாளா்கள் வரையில் தனித்தனியே பிரித்து பாக்ஸ் போன்ற அமைப்பில் அமர வைப்பதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளளன. சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கூட்டத்துக்கு வந்து செல்வோா் பாதுகாப்பாக திரும்பும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டின் தொடக்கமாக திமுக கொடி ஏற்றுவதற்காக 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி தொலைவுக்கு பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
மாநில மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

