Skip to content

ரூ.2.12 கோடியில் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி காட்டூரில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024 மற்றும் 2025 ஆம் நிதி ஆண்டில் நபார்டு வங்கி நிதி உதவிடன் ரூ.2.12 கோடி மதிப்பேட்டில் மூன்று தளங்கள் கொண்ட ஒன்பது வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
திருச்சி காட்டூரில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு போதிய வகுப்பறைகள் இல்லை என கோரிக்கை வைக்க நிலையில் இந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ்
ரூ 212 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் 3 தளங்கள் கொண்ட 9 வகுப்பறைகள் அடங்கிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை மாணவிகளின் பயன்பாட்டிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 -ன் தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம், தலைமை ஆசிரியர் அப்துல் ஜாபர் உட்பட பள்ளி மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!