Skip to content

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து.. கரூரில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கரூரில் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறார்.

இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்த தகவலை இஸ்ரேலிய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை கண்டித்தும், ட்ரம்பின் ஆட்சி வீழ வேண்டும், ஈரான் மீது தாக்குதல் நீதியின் மீதான தாக்குதல் என மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!