Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்- பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அரியலூர் மாசி மகத்தை முன்னிட்டு திருமழபாடி கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக

நட்சத்திர நாள் தான் மாசி மகம். இந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவர். மாசி மகத்தன்று தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்யும் போது பித்துருக்கள் தோஷம் நீங்கி முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் கொள்ளிடம் ஆற்று கரையோரம் நூற்றுகணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர். காய்கறிகள் பழங்கள் மற்றும் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த பண்டங்களை வைத்து வழிபாடு செய்த பொதுமக்கள் பின்னர் அதனை ஆற்றில் கரைத்தனர்.

error: Content is protected !!