Skip to content

வீடு புகுந்து தாய்-மகளை தாக்கிய வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

வீடு புகுந்து தாய் மகளை தாக்கிய வாலிபர் கைது

திருச்சி -மதுரை மெயின் ரோடு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( 36). இவர் திருச்சி ஆர்.எம்.எஸ் காலனி தெற்கு விஸ்தரிப்பு மூன்றாவது தெரு பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் வீடு புகுந்து அவரையும், அவரது மகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிலிருந்த டி.வி மற்றும் படுக்கையையும் சேதப்படுத்தி உள்ளார். வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி தென்னூர் பாரதிநகர் சிந்தாமணி ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் என்கிற லீமா ரோஸி (65) . இவர் அங்குள்ள ஒரு மாடி வீட்டில் கடந்த ஓராண்டாக வாடகைக்கு குடி இருந்தார். அவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதி அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் சரியான சிகிச்சை மேற்கொள்ளாமல் வலியை தாங்கிக் கொண்டிருந்தார்.
இதில் அவரது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு கடுமையான வலி ஏற்பட்டது .பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்க முயன்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பாகவே அவர் இறந்து விட்டார் .இது குறித்து கவிதா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!