Skip to content

பேருந்தில் செவிலியருக்கு உடல்நலக்குறைவு; நிறுத்தாமல் மருத்துவமனைக்கு ஓட்டிய டிரைவர்

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சுபாஷினி இவர் வால்பாறையில் அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றி வருகிறார். பயிற்சிக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றொரு செவிலியருடன் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆழியார் வனத்துறை சோதனை சாவடி அருகே வரும்போது சுபாஷினிக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அரசு பேருந்து நடத்துனர் சுரேஷ்குமார் மற்றும் ஓட்டுனர் சக்திவேல் ஆகியோர் பஸ்ஸை வேகமாக ஆழியார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒட்டிச் சென்றுள்ளனர். அங்கு சுகாதார நிலையம் பூட்டி கிடந்ததால், 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் பேருந்து இடையில் எங்கும் நிற்காமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சமத்துவ அருகே வரும்போது அங்கு தயாராக இருந்த 108 வாகனத்தில் சுபாஷினி மாற்றப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பேருந்தில் அந்த பயணிகள் கூறும்போது,
24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆழியார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சைகள் பெற முடியாமல், விபத்துகளுக்கு முதலுதவி சிகிச்சையும் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

error: Content is protected !!