Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்தது. பாமக சார்பில் அன்புமணி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாகியுள்ளனர்.

error: Content is protected !!