கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பணியாற்றிய வாலண்டியர்ஸ் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ (CBI) அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று தவெக பரப்புரையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த தவெக வாலண்டியர்ஸ் பத்துக்கும் மேற்பட்டோர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் நடந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் முன்னேற்பாடு பணிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

