கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் சனி பகவானுக்கு மகா தீபாரதனை.
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் வீற்றிருக்கும் நவகிரகங்களுக்கும் அம்மன் ஆலயங்கள் வீற்றிருக்கும் நவகிரகங்களுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நவகிரங்களுக்கும் சனி பகவான் பெயர்ச்சியை ஒட்டி 12 நவகிரங்களுக்கும் சிறப்பு பொருட்களால்

அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து பிரத்தியேகமாக யாக சாலை அமைத்து யாக வேள்வி நடைபெற்று யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மூலவர் கணபதிக்கும் சனி பகவான் உள்ளிட்ட நவகிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து தங்க கவசம் சாத்தப்பட்டது.
பின்னர் மூலவர் கணபதிக்கும் சனிபகவான் உள்ளிட்ட 12 ராசி பகவானுக்கும் தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியும் சமர்ப்பிக்கப்பட்டு, உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

