Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்தும் வழங்கி வருகின்றனர். தினந்தோறும் அண்ணா அறிவாலய வளாகத்தில் அதிகாலை முதலே தொண்டர்கள் திரள ஆரம்பித்து, மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை சமர்ப்பிக்கும் சூழல் நிலவியது.

இதுவரை மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல் வெளியானது. ஒரு தொகுதிக்கு பலர் போட்டியிட முன்வருவதால், கட்சிக்குள் போட்டி சூழல் உருவாகியுள்ளதுடன், தேர்தலை எதிர்கொள்ளும் உற்சாகமும் வெளிப்படையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசத்தை திமுக நீட்டித்து உள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 2 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கூடுதலாக 4 நாள்கள் அவகாசம் அளித்து மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் விருப்பமனுக்களை வழங்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து அறிவாலயத்தில் செந்தில்பாலாஜி விருப்ப மனு அளித்தார். கோவை – கரூர் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!