குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் தீவைத்து அழிப்பு.
கரூர் மாவட்டம் குளித்தலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, நங்கவரம், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த

ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
மேலும் வாகன சோதனையின் போது வெளி இடங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா போதை பொருட்களையும் பறிமுதல் செய்து வழக்குகள் பதியப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.5 டன் அளவு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இன்று குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆறு அருகே குளித்தலை குற்றவியல் 1 நீதிபதி ஹரிராம் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆனந்தகுமார் முன்னிலையில் குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அதனை தீ வைத்து அழித்தனர்.
