Skip to content

தெலுங்கானாவில் ‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.1 கோடி பறிப்பு

தெலுங்கானாவில் மல்காக்ரி பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரை சில நாட்களுக்கு முன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்களுடைய தொலைபேசி எண் பெண்கள் கடத்தல் மற்றும் பிற குற்றங்களுடன் தொடர்பில் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர்.
இதனால் பயந்து போன அந்த ஓய்வு பெற்ற நீதிபதி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கில் அடுத்தடுத்து பணம் போட்டுள்ளார். இதன்படி, அவர் ரூ.1 கோடி வரையிலான தொகையை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், மோசடி செய்யப்பட்டு உள்ளோம் என திடீரென உணர்ந்து போலீசிடம் சென்று புகார் அளித்திருக்கிறார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவர் ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியாக இருந்தபோதும், எப்படி மோசடியில் சிக்கினார்? என நிருபர்கள் கேட்டுள்ளனர். அதற்கு போலீசார், டிஜிட்டல் கைது செய்யும்போது, தங்களை போலீசார் என கூறி, பாதிக்கப்படுபவர்களை மோசடி செய்வார்கள். சட்டவிரோத செயல்களில் உங்களுக்கு தொடர்பு உள்ளது என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். கூறி பணம் பறிக்க முயற்சிப்பார்கள். உங்களுக்கு அழுத்தம் தருவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!