Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜஸ்தான் கவர்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ராஜஸ்தானில் கவர்னர் ஹரிபாவ் பாக்தே, வழக்கம்போல் மேற்கொள்ளும் உடல்நல பரிசோதனைக்காக சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு இன்று சென்றார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிப்பது என டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதுபற்றி அந்த மருத்துவமனை அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கவர்னருக்கு சிகிச்சை அளிக்க 9 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அவருடைய உடல்நிலையை சீராக கவனித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!