Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

14 வயது சிறுமியை தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்கொடுமை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில் 17 வயதான சிறுவனுடன் இரு சிறுமிகள் பைக்கில் சென்றனர். நள்ளிரவில் சிறுவனுடன் பைக்கில் சென்றபோது மதுபோதையில் இருந்த மர்மநபர்கள் அவர்களை விரட்டி சென்றனர். உடன் பைக்கில் சென்ற மூன்று பேரும் கீழே விழுந்தனர். அச்சத்தில் சிறுவனும், 16வயது சிறுமியும் தப்பியோடியுள்ளனர். அப்போது  14 வயது சிறுமியை அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு தூக்கிச்சென்ற போதையில் இருந்த ஆசாமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மருத்துவர்களின் தகவலின்படி, மேல்மருத்துவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவத்தில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தும் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!