பாலிமர் நோட்டுகள் முதன்முதலில் 1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கனடா, பிஜி, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, வியட்நாம் மற்றும் ருமேனியா உட்பட மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலிமர் நோட்டுகளை பயன்படுத்துகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 2025 நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கையின்படி, ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவினம் 2024 நிதியாண்டில் ரூ. 5,101.4 கோடியாக இருந்த நிலையில், 2025 நிதியாண்டில் ரூ.6,372.8 கோடியாக அதிகரித்துள்ளது.
பரிசீலித்து
பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப் படுத்தும் திட்டத்தை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் ஆரம்பகட்டத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையை எதிர் காலத்தில் வலுவடைவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றுவதில் நம்பிக்கை உள்ளது.
அதிக ஆயுள்
இந்த நோட்டுகள் தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கு படியாமல் சுத்தமாக இருக்கும். காகித நோட்டுகளை காட்டிலும் அதிக ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பல நாடுகள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகின்றது. கள்ள நோட்டுகளை தடுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா கூறியதாவது:- பணவீக்கம் பரவலாகி, நீடித்தால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். விநியோக சங்கிலி தடைகளின் கால அளவு மற்றும் விலைகள் மீதான அதன் தாக்கம் ஆகியவை தற்போது முதன்மையான கவலையாக உள்ளது என்றார்.
