Skip to content

12 காவல் ஆய்வாளர்களுக்கு டி.எஸ்.பி-யாக பதவி உயர்வு- அரசு உத்தரவு

12 காவல் ஆய்வாளர்களுக்குக் துணை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்காலிக டிஎஸ்பி-க்களாக நியமிக்கப்பட்டிருந்த 12 ஆய்வாளர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம் 2016-ன் பிரிவு 17-ன் கீழ் இந்தப் பதவி உயர்வு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்

சி. இளவரசு – தென்காசி மாவட்டக் குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.

பி. காந்தி – கன்னியாகுமரி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி.

ஆர். சகாய அன்பரசு – ராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.

எம். ரவீந்திரன் – சேலம் சிறப்புப் பிரிவு நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி.

ஆர். செந்தில்குமார் – மதுரை உயர் நீதிமன்றப் பாதுகாப்பு உதவி ஆணையர்.

எம். அறிவழகன் – நாகப்பட்டினம் மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

எஸ். திருஞானசம்பந்தன் – திருப்பூர் மாவட்டக் குற்றப் பிரிவு-II டி.எஸ்.பி.

கே. கபிலன் – சேலம் மாவட்டக் குற்றப் பிரிவு-II டி.எஸ்.பி.

எஸ். ரவிச்சந்திரன் – பெரம்பலூர் உட்கோட்ட டி.எஸ்.பி.

ஆர். செந்தில்குமார் – கரூர் மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

ஜே. ரமேஷ் – ஆவடி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர்.

எம். கண்ணன் – தூத்துக்குடி மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.

error: Content is protected !!