திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவியர்களுக்கான செஸ் போட்டி 6 சுற்றுகள் கொண்ட போட்டிகளாக ஆகஸ்ட் 18 முதல் 20 வரை திருச்சி, ஹோலிகிராஸ் கல்லூரியில் நடைபெற்றது.
31 கல்லூரிகளிலிருந்து 166 மாணவியர்கள் பங்கேற்றனர்.
ஆறு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் மாணவியர்கள் பிரிவில் திருச்சி, ஹோலி கிராஸ் கல்லூரி முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான செஸ் போட்டியில்
சாம்பியன் பட்டத்தை பெற்றது.
இதில் மாணவிகள்
ரவீனா ஸ்ரீ, ஹெப்சிபா, சக்தி ஶ்ரீ, எம். தேவதர்ஷினி, பிருந்தா, லிடிவா ஜான்சி, சாருமதி ஆகிய 6 மாணவியர்களும் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும் தேர்வில் தேர்ந்தெடுக்கபட்டனர்
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர்
பி. இசபெல்லா ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்விதுறை தலைர் பேராசிரியர் ஏ. பழனிசாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஐ. திரவியா கிளாடினா, ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் சி. மாலதி, பெண்கள் போட்டி
ஒருங்கிணைப்பாளர் ஜி. பிருந்தா ஆகியோர் முன்னிலையில் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
