பாரதிதாசன்
பல்கலைக்கழக
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான செஸ் போட்டி
பிஷப் ஹீபர் கல்லூரி பட்டம் வென்றது
திருச்சி ஆக 23-
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான செஸ் போட்டி 6 சுற்றுகள் கொண்ட போட்டிகள் திருச்சி, ஹோலிகிராஸ் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 25 கல்லூரிகளிலிருந்து 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆறு சுற்றுகள் முடிவடைந்த நிலையில்
மாணவர்கள் பிரிவில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான செஸ் போட்டியில்
சாம்பியன் பட்டத்தை பெற்றது.
கல்லூரி மாணவர்கள்கார்த்திக்பாலா, அஸ்வின், விஸ்வநாதன், தினேஷ் கண்ணன், ஹரிஹரன், சரண்ராஜ் ஆகிய 6 மாணவர்களும் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் பங்கேற்க நடைபெற்ற தகுதி பெறும் தேர்வில் தேர்ந்தெடுக்கபட்டனர்.
செஸ் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் ஜெ. பிரின்சி மெர்லின், துணை முதல்வர்கள் சி. ஆர். சத்யசீலன், சி. ரவிதாஸ், பொருளாளர் சி. அலெக்ஸ் ராஜ்குமார் பால் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஏ. ராஜ்குமார், உடற்கல்வித் துறைத் தலைவர் ஏ. பால்ராஜ் ஆகியோர்
பாராட்டினார்கள்.
பட விபரம்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக
கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற செஸ் போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்த திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள்.
