Skip to content

பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ்

பாமக கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் நிர்வாக உரிமை தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.ராமதாஸ் தரப்பில் 18 பக்கங்கள் கொண்ட விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அன்புமணியின் மோசமான செயல்பாடுகளே கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அன்புமணி கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும், தலைவர் பதவியை சட்டவிரோதமாக அறிவித்ததாகவும் ராமதாஸ் தரப்பு வாதிட்டுள்ளது.அன்புமணி தரப்பில், ராமதாஸ் தற்போது 87 வயதை எட்டியுள்ளதால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் திறன் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனர் என்ற முறையில் ஆலோசனை வழங்க மட்டுமே அவரால் முடியும் என்றும், கட்சி நிர்வாகத்தில் தலையிடும் உரிமை இல்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மேலும் விசாரணைக்காக வழக்கை மார்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்புமணி தரப்பு வாதங்களை முழுமையாக தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்த வழக்கு பாமகவின் உள் கட்சி பிளவை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தொடரும் நிலையில், கட்சியின் எதிர்காலம் மற்றும் அங்கீகாரம் குறித்து நீதிமன்ற தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மார்ச் 13 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

error: Content is protected !!